03/22/2025
அமெரிக்காவில் உள்ள Shady Grove Middle School-ல் தமிழில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தேன். இதை எழுதிக்கொடுத்த அந்தத் தமிழ் மகன்/மகளுக்கு என் வணக்கம்! 🙏இருமொழியைப் பற்றிதான் இதுவும் பேசுகிறது! 😁
Kerala Association of Greater Washington (KAGW) நடத்திய ஆங்கிலப் பேச்சுப்போட்டிக்கு நடுவராகச் சென்றிருந்தபோது கண்ட காட்சி இது!
03/18/2025
இடையும் கொடியும் குலுங்கும்
நடையும் மொழியும்
எடை போட கம்பன் இல்லை
எனக்கந்தத் திறனும் இல்லை
இலை மூடும் வாழைப் பருவம்
கேள்வி: கடைசி வரியின் பொருள் என்ன?
03/12/2025
உணவிலக்கணம்
————————-
விருந்தே எனினும்
விரும்பாதது தவிர்த்து - உண்ண
விரும்பியதில் பாதி மட்டும்
விரும்பிச் சுவைத்து உண்!
03/05/2025
முதுமையின் அருமை பெருமை
முழுவதுமாய்ப் புரிகிறது
ஐம்பதைக் கடக்கையில்!
03/02/2025
அமெரிக்காவில் முட்டைக்குக் கடும் தட்டுப்பாடு! விலையும் விண்ணை முட்டுகிறது!
அன்பளிப்பு கொடுப்பவர்கள் ரெண்டு அவிச்ச முட்டையா கொடுங்க! வச்சு வச்சு சாப்புட்டுக்கிறேன்! 😁
02/26/2025
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள் தமிழ்நாட்டில். ஆனால், வெயிலின் அருமை கடுங்குளிரில் தெரிகிறது வாசிங்டனில்! ஒரு வழியாகக் கடுங்குளிர் முடிந்து வெயில் தலைகாட்டுகிறது; பகலில் மீண்டும் தொடங்கிய பறவைகளின் இரைச்சல் மனதை மகிழ்ச்சிப்படுத்துகிறது!
02/22/2025
தமிழ் படிக்கத் தயங்கும் போக்கு (வெறுப்பு), தமிழ்நாட்டில் சில தமிழ் மாணவர்களிடத்திலேயே உளதோ?
02/04/2025
பார்க்கும்போதெல்லாம் பரவசப்படுத்தும் என் கிராமத்துத் தேவாலயமும், பள்ளி வளாகமும்!
The Catholic Church at my native village and the Elementary school ground!
01/30/2025
வெளியிலிருந்து ஒருமுறை வேடிக்கை மட்டுமே பார்த்திருந்த மைசூரு அரண்மனையை இம்முறை இரவு பகலாகச் சுற்றினேன்!
Mysore Palace, Karnataka, India.
01/28/2025
நவீன நட்சத்திர விடுதிகளுக்குச் சற்றும் சளைக்காத, 118 ஆண்டுப் பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க செட்டிநாட்டுச் சிதம்பர விலாஸ் விடுதியையும் (கூடவே அறை மற்றும் உணவுப் பொருள்களின் விலையையும்) கண்டு வியந்துபோனேன்!
01/26/2025
எனது கிராமத்துப் பள்ளியில் இந்தியக் குடியரசு நாள் அனுசரிப்பு. மாணவர்களோடு நானும் உறுதிமொழி ஏற்றேன். 👍
Indian Republic Day formalities at my native village school. 
01/25/2025
ஐந்தாம் வகுப்பு படித்தபோது சுற்றுலா சென்ற திருமயம் கோட்டையில் மீண்டும் ஏறி மகிழ்ந்தேன்!
Historical Fort at Thirumayam, Tamilnadu, India.